அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஜூலை 04, 2024 08:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் மக்களுடன் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கண்ட இந்நிகழ்ச்சிகளில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களும் பங்கு பெற வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.