வெற்றியை விரும்பாத கோவை தி.மு.க.,' முதல்வருக்கு வந்த ஒரு குமுறல் கடிதம்
வெற்றியை விரும்பாத கோவை தி.மு.க.,' முதல்வருக்கு வந்த ஒரு குமுறல் கடிதம்
ADDED : மார் 31, 2024 05:01 AM

முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., தொண்டர் எழுதிய கடிதம்:
லோக்சபா தேர்தலில், கோவை மாவட்டம் முழுதும், 20 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலராக, அமைச்சராக இருந்து பணியாற்றிய பொங்கலுார் பழனிசாமியை முழுமையாக, மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் புறக்கணித்து விட்டனர்.
அவரோடு இருந்த மாவட்ட நிர்வாகிகளாக, ஒன்றிய செயலர்களாக, நகர செயலர்களாக பணியாற்றிய எல்லாரையும் முழுமையாக, எந்த பதவிக்கும் போடாமல் புறக்கணித்து விட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்சி பதவிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு தந்ததிலும், கோவை மாவட்ட நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனர். 'டாஸ்மாக்' கடைகளில், அ.தி.மு.க., ஆட்சியில் யாரெல்லாம் மதுக்கூடம் எடுத்து நடத்தினரோ, அவர்களை தான் இப்போதும் அனுமதித்துள்ளனர்....

