ADDED : ஜூலை 29, 2024 12:25 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே முன்னாள் காங்., நிர்வாகியும், கவுன்சிலரின் கணவருமான ஜாக்சன் 38, வெட்டி கொல்லப்பட்டார்.
திருவட்டார் குன்னத்து விளை ஜாக்சன். நகர இளைஞர் காங்., முன்னாள் தலைவர். மினிலாரி ஓட்டி வருகிறார். மனைவி உஷா குமாரி பேரூராட்சி பத்தாவது வார்டு காங்., கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு ஜாக்சன் சர்ச் அருகே நின்று கொண்டிருந்தபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கத்தியால் வெட்டி தப்பினர்.
ஜாக்சன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், பின்னர் திருவனந்தபுரம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எஸ்.பி., சுந்தரவதனம் டி.எஸ்.பி.,உதயசூரியன் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் வெள்ளாங்கோட்டை சேர்ந்த ராஜ்குமார் 32, என்பவர் தலைமையில் வந்தவர்கள் கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ராஜ்குமாருக்கும் ஜாக்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.