மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை
மின் கட்டண உயர்வை திரும்ப பெற காங்., மாநில தலைவர் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 11:38 PM
கரூர்:''மக்கள் மீது சுமையை சுமத்தக் கூடாது என்பதால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,'' என, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கரூரில் காங்., மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளாக அவசர நிலை பிரகடனம் அறவிக்காத ஆட்சி நடந்தது. இதனால், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்து உள்ளனர். பா.ஜ., வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல், பா.ஜ., ஆட்சி நடத்த முடியாது. அவர்களை விட, எதிர்க்கட்சிகளாக இருக்கும் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இங்கிலாந்தில், 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் வந்தது போல, இந்தியாவிலும் வரும். மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் உதய் மின் திட்டத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் கையெழுத்திட்டது காரணமாகும். இருந்தபோதும், மக்கள் மீது சுமையை சுமத்தக் கூடாது என்பதால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.