கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
கள்ளசாராய சாவு எதிரொலி ; உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ADDED : ஜூன் 20, 2024 08:41 PM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலியாக, மதுவிலக்கு அமல் பிரிவு ஏ.டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால், எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மது விலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக பொறுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதே போல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கீழ்பாக்கம்காவல் துணை ஆணையர் கோபி சென்னை மதுவிலக்கு பிரிவு எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.