சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு
ADDED : மார் 06, 2025 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் படி, வளசரவாக்கம் போலீசார், கடந்த 27ம் தேதி சம்மன் ஒட்டினர்.
அப்போது வீட்டின் பாதுகாவலராக இருந்த முன்னாள் ராணுவ பாதுகாப்பு படை வீரர் அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் உள்ளிட்டோர் சம்மனை கிழித்து போலீசாரை தாக்கியதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஜாமின் கோரி, கடந்த 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.