
பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டின், கல்லுாரி சாலையின், பர்வாஜ் பிளாசா அருகில், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று மதியம் இம்மையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் தீக்கிரையானது. அக்கம், பக்கத்து கட்டடங்களிலும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
பெங்களூரில் பல்வேறு இடங்களில், விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்த, ஆந்திராவின், பங்காருபாளையவின் பிரசாத் பாபு, 35, என்பவரை, கே.ஆர்.புரம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 1.45 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 பைக்குகள் மீட்கப்பட்டன.
பெங்களூரின், நாடம்மா லே -- அவுட்டில் வசித்தவர் ஸ்ரீகண்டா, 36. இவரது தம்பி நாகேந்திரா, 30. இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்தது. நேற்று காலை வாக்குவாதம் நடந்தது. அப்போது நாகேந்திரா, கத்தியால் அண்ணனை குத்தியதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொலையாளி கைது செய்யப்பட்டார்.

