ADDED : மார் 01, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற ேஹம்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 6ம் தேதி, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேலுார் மாவட்டம் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ேஹம்ராஜ், 27 என்பவரை கைது செய்தனர். டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில், நேற்று கைது செய்துள்ளனர்.