அப்பா என்னா வெயிலு! தாங்க முடியல!: 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்
அப்பா என்னா வெயிலு! தாங்க முடியல!: 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்
ADDED : மே 02, 2024 12:29 PM

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆரஞ்சு அலர்ட்
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்
ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

