ADDED : மே 28, 2024 06:19 AM

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணை முழு பாதுகாப்புடன் உள்ளதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும், தமிழகத்தின் பாசன உரிமையை பாதிக்கும் நடவடிக்கையையும் எதிர்த்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசுக்கு தமிழக முதல்வரும் கடிதம் எழுதியுள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் ஓடும் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாசன நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டுமானால், மாநில அரசுகள் கலந்து பேசி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்று மேற்கொள்ள வேண்டும் என, காவிரி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே, கேரளா அரசு இத்தீர்ப்பின்படி, தமிழக அரசு அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகே, தடுப்பணை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
-கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்