ADDED : ஜூன் 07, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர, வரும் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ், 102 அரசு ஐ.டி.ஐ., 305 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சேர்ந்து பயிற்சி பெற, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து, மே 10 முதல், www.skilltraining.tn.gov.in இணையதளத்தில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் வரும், 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தமிழகம் முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 136 உதவி மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். சந்தேகம் இருந்தால், 94990 55689 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.