ADDED : செப் 08, 2026 03:22 AM
சென்னை: எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவிப்பு குறித்து, எல்.ஜி., பெருங்காய நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மும்பை ஆலையில் இருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகள் தரம் குறைந்தவை என, வகைப்படுத்தப்பட்டு, கடந்த ஆக., 27ல், வெளியிடப்பட்ட எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது, மும்பையில் எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது. மறுபரிசோதனை செய்வது உள்ளிட்ட உரிய சட்டப்பூர்வ நடைமுறைகளை தொடங்கி உள்ளோம்.
ஒழுங்குமுறை ஆணையத் தின் ஒவ்வொரு கண்காணிப்பையும் நாங்கள் மிகவும் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறோம். அதேநேரம், எங்கள் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
