ADDED : செப் 12, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:நிதி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதனின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் செயல்பட்டு வந்த, மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவன தலைவராக இருந்த தேவநாதன், 24.50 கோடி ரூபாய் மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த, தேவநாதனின் கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், நிதி நிறுவனத்தின் முன்னாள்இயக்குனரும், தேவநாதனின் நேர்முக உதவியாளருமான சுதீர் சங்கர், 46 நேற்று கைது செய்யப்பட்டார்.