ADDED : ஆக 07, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60ல் இருந்து 62 ஆக உயர்த்த பரிசீலனை செய்வதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களில், 40 சதவீதம் பேர், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர்.
அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாததால், தி.மு.க., அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
அரசு பணியை எதிர்நோக்கி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை, 80 லட்சத்தை கடந்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.