அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இப்ராஹிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டா
அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இப்ராஹிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டா
ADDED : ஆக 01, 2024 02:46 AM
சென்னை:போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள செய்யது இப்ராஹிம், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம், 52. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவராக இருந்தார். சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் செங்குன்றம் குடோனில் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்றபோது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில், செய்யது இப்ராஹிம் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும், கோடிக்கணக்கில், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'எங்களின் முதற்கட்ட விசாரணையில், செய்யது இப்ராஹிம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதில் அரசியல் புள்ளிகளும் இருக்க வய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். அதனால், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.