திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கொலையாளிகள் புகைப்படம்,ரூ. 25 லட்சம் பரிசு
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கொலையாளிகள் புகைப்படம்,ரூ. 25 லட்சம் பரிசு
ADDED : மே 29, 2024 08:54 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் திருவிடைமருதூர் பா.ம.க., பிரமுகர் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் புகைப்படங்களை போஸ்டராக ஒட்டி கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.25 லட்சம் என திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் என்.ஐ.ஏ.,அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் கும்பகோணம் திருபுவனம் திருவிடைமருதூரை சேர்ந்த பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் 45. இவரை 2019ல் மர்ம கும்பல் ஒன்று கொலை செய்தது. போலீசார் 10க்கு மேற்பட்டோரை கைது செய்த நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த கொலை வழக்கில் திருவிடைமருதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், வடமாங்குடியைச் சேர்ந்த புர்கானுதின், சாகுல் ஹமீது, நபில் ஹாசன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் திருவிடைமருதூர் பா.ம.க., பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் ஐவரின் புகைப்படங்கள், பெயர்கள் அடங்கிய விபரங்களை என். ஐ.ஏ., அதிகாரிகள் போஸ்டராக ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்த ரயில் பயணிகள் போஸ்டரை ஒரு நிமிடம் நின்று பார்த்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.