40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் நம்பிக்கை
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்: திருமாவளவன் நம்பிக்கை
ADDED : ஏப் 17, 2024 04:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: 'தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்.,19ம் தேதி நடைபெற உள்ளது. அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான கூட்டணி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
சிதம்பரம் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

