'தி.மு.க.,வுக்கு 38 எம்.பி.,க்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை'
'தி.மு.க.,வுக்கு 38 எம்.பி.,க்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை'
ADDED : மார் 23, 2024 07:31 AM

கோவை: தி.மு.க.,வுக்கு 38 எம்.பி.,க்கள் இருந்தும், தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை, என, முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில், வேலுமணி அளித்த பேட்டி:
தமிழகத்தில் மட்டுமின்றி, உலகிலேயே ஏழாவது பெரிய கட்சியாக, 2 கோடி உறுப்பினர்களை அ.தி.மு.க., கொண்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் லோக்சபா தொகுதிகளில் மிகப்பெரிய வளர்ச்சியை, அ.தி.மு.க., தந்துள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், தி.மு.க., அரசு எந்த திட்டத்தையும் இங்கே கொண்டு வரவில்லை. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்.
லோக்சபா தொகுதியில் பெறும் வெற்றி, சட்டமன்ற தொகுதியில் எதிரொலித்து, மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவோம். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்.
தி.மு.க., மூன்று ஆண்டுகளில், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 38 எம்.பி.,க்கள் இருந்தும் எதுவும் பயனில்லை. அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று, தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பார்கள்.
இவ்வாறு, வேலுமணி தெரிவித்தார்.

