ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 ஊதியம் வீட்டு வேலை தொழிலாளர்கள் கோரிக்கை
ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 ஊதியம் வீட்டு வேலை தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : செப் 05, 2024 12:17 AM
சென்னை:'வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி சட்டம் உருவாக்குவது தொடர் பாக, மாநில அளவிலான கருத்தரங்கம், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் புறச்சேவை துறை சார்பில், சென்னையில் நேற்று நடந்தது.
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வழங்க வேண்டும்.
நல வாரியத்திற்கு, தமிழக அரசு வீட்டு வரியிலிருந்து 1 சதவீதம் ஒதுக்க வேண்டும். மாத ஓய்வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள், கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.
வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சிலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணைய தலைவர் குமாரி உட்பட பலர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.