UPDATED : ஏப் 13, 2024 05:23 AM
ADDED : ஏப் 13, 2024 02:35 AM

ஆத்துார்:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் தேவதா ைஸ ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்துார், ராணிப்பேட்டையில் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:
வரும், 2026ல், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைப்போம். திராவிட கட்சிகளுக்கு, 57 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தது போதும். பா.ம.க., வெற்றி பெற்றதும், ஆத்துார் மாவட்டம் உருவாக்கப்படும். ஆத்துாரில், 1,200 அடிக்கு கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது.
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தொலைநோக்கு பார்வை, திட்டம் எதுவும் இல்லை. ஆத்துாரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை வீணாக்க வேண்டாம். இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியில், தேசிய கட்சிகள் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக கூறிய தி.மு.க., 3 ஆண்டுகளாகியும் கொண்டு வரவில்லை. காவிரி உபரிநீர், வசிஷ்ட நதியில் கொண்டுவரப்படும். தேர்தல் நேரத்தில், 500, 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

