ADDED : ஏப் 22, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'அனைத்தையும் காவிமயமாக்கும் சதித் திட்டத்தின் முன்னோட்டமாக, துார்தர்ஷன் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப்பதிவு: உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசினர். தமிழகத்தின் ஆளுமைகளின் சிலைகள் மீது, காவி பெயின்ட் ஊற்றி அவமானப்படுத்தினர்.
வானொலி என்ற துாய தமிழ் பெயரை, ஆகாஷவாணி என சமஸ்கிருத மயமாக்கினர். தற்போது துார்தர்ஷன் லோகோவிலும் காவி கறையை அடித்திருக்கின்றனர்.
அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ., சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக, இந்திய மக்கள் வெகுண்டெழுவதை, 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

