ADDED : மே 29, 2024 12:52 AM
தமிழக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:
ஆமதாபாத்தில் கைதான முகமது நுஸ்ரத், சிங்கப்பூர், மலேஷியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, தொலை தொடர்பு சாதனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் தொழில் அதிபர் போல செயல்பட்டுள்ளார்.
கடந்த, 2004ல், இலங்கையில் உயர் நீதிபதியாக இருந்த சரத் அம்பேபிட்டியா, சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போதை பொருள் கடத்தல்காரர் நியாஸ் நவுபரினுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவரின் முதல் மனைவியின் மகன் தான் முகமது நுப்ரான். இவர் ஜவுளி வியாபாரி போல அடிக்கடி நம் நாட்டிற்கு வந்துள்ளார்.
மற்ற இருவரும், சமூக விரோத செயலில் ஈடுபட்டு, இலங்கை போலீசாரால் கைதாகி, ஜாமினில் வெளியே வந்து உள்ளனர்.
நால்வரும் ஐ.எஸ்.கே.பி., என்ற, 'இஸ்லாமிக் ஸ்டேட் கோராஸான் புராவின்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். போதை பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்காக, நால்வரும் தமிழகத்தில் வந்து சென்ற இடங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.