ADDED : ஆக 07, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின் 34, கேரளா கொல்லம் அருண்துளசி 32, திருவனந்தபுரம் ஷாஜி 48.
இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் (மெத்தபட்டமையின்) போதைப்பொருளை வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது.
மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.