மும்பையில் திடீர் புழுதிப்புயல்: ராட்சத பேனர் விழுந்து 8 பேர் பலி
மும்பையில் திடீர் புழுதிப்புயல்: ராட்சத பேனர் விழுந்து 8 பேர் பலி
UPDATED : மே 13, 2024 10:08 PM
ADDED : மே 13, 2024 05:55 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பலத்த காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதில் ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில் எட்டு பேர் பலியாயினர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. விமான சேவை பாதிக்கப்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். விளம்பர பலகை விழுந்து இதில் மூன்று பேர் பலியானர். மேலும் பலர் பேர் காயமுற்றனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
எச்சரிக்கை
உள்ளூர் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது மக்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. தானே, அம்பர்நாத், பத்லாபூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
ராட்சத பேனர் விழுந்து 8 பேர் பலி
இந்த புழுதி புயலால் பெட்ரோல் பங்க் அருகே இருந்த ராட்சத விளம்பர பேனர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.