sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊட்டி, கொடைக்கானல் செல்ல 6.39 லட்சம் பேருக்கு 'இ - பாஸ்'

/

ஊட்டி, கொடைக்கானல் செல்ல 6.39 லட்சம் பேருக்கு 'இ - பாஸ்'

ஊட்டி, கொடைக்கானல் செல்ல 6.39 லட்சம் பேருக்கு 'இ - பாஸ்'

ஊட்டி, கொடைக்கானல் செல்ல 6.39 லட்சம் பேருக்கு 'இ - பாஸ்'


ADDED : மே 10, 2024 06:05 AM

Google News

ADDED : மே 10, 2024 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நீலகிரி மாவட்டத்திற்கு, 3.65 லட்சம் சுற்றுலா பயணியர், 68,878 வாகனங்களில் செல்லவும், கொடைக்கானலுக்கு, 2.74 லட்சம் பேர் 42,661 வாகனங்களில் செல்லவும், 'இ - பாஸ்' பெற்றுள்ளனர்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. எனவே, இச்சுற்றுலா தலங்களுக்கு செல்ல, 'இ - பாஸ்' அவசியம் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த 7 ம் தேதி முதல் ஜூன் 30 வரை, இ - பாஸ் நடைமுறை அமலாகி உள்ளது. இ - பாஸ் பெற, epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏதேனும் சந்தேகம் என்றால், நீலகிரி மாவட்டத்திற்கு 1077 என்ற எண்ணிலும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு, 0451 - 2900233, 9442255737 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல நேற்று பகல் 1:00 மணி வரை, 3 லட்சத்து 65 ஆயிரத்து 461 பயணியர், 1,280 பஸ்கள், 49,397 கார்கள், 1,191 மினி பஸ்கள், 10,534 இருசக்கர வாகனங்கள், 3,326 வேன்கள், 3,150 இதர வாகனங்கள் என மொத்தம், 68,878 வாகனங்களில் பயணிக்க, இ - பாஸ் பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு இ - பாஸ் இல்லாமல், 4,169 வாகனங்களில் வந்த, 15,707 பேருக்கு மாநில மற்றும் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனை சாவடிகளில் இ - பாஸ் உடனடியாக பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்ல, நேற்று மதியம் 2:27 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 74 ஆயிரத்து 211 பயணியர், 1,129 பஸ்கள், 28,804 கார்கள், 1,207 மினி பஸ்கள், 6,830 இரு சக்கர வாகனங்கள், 3,205 வேன், 1,486 இதர வாகனங்கள் என, மொத்தம் 42,661 வாகனங்களில் பயணிக்க, இ - பாஸ் பெற்றுள்ளனர்.

அனைத்து சுற்றுலா பயணியருக்கும், இ - பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பயணியருக்கு எந்த சிரமமும் இல்லாமல், இ - பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us