UPDATED : மே 04, 2024 10:26 AM
ADDED : மே 04, 2024 09:19 AM

புதுடில்லி: அரசியல் பழிவாங்கும் நோக்கில், இருப்பதாக கூறி, ஆம் ஆத்மி பிரசார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கியது.
டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் மே 25ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் ஜூன் 1ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலைவரை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சிறையில் அடைத்துள்ளதாக கூறி ஆம் ஆத்மியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இரண்டு நிமிடங்கள் உடைய பிரசார பாடலை ஆம் ஆத்மி சமீபத்தில் வெளியிட்டது. 'இது தேர்தல் நடத்தை விதிமீறல்' எனக்கூறி, அக்கட்சியின் பிரசார பாடலுக்கு தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது.
தற்போது கட்சி தலைமை பிரசார பாடலில் சில திருத்தங்களை செய்துள்ளது. இந்நிலையில் இன்று(மே 04) தேர்தல் பிரசார பாடலுக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.