தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தேர்தல் நடத்தை விதிமீறல்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தை விதிமீறல்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தை விதிமீறல்: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு


ADDED : ஏப் 12, 2024 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இரு நாட்களாக ரம்ஜான் தொழுகையை, அரசின் பள்ளி மைதானங்களில் நடத்தி உள்ளனர். தேர்தல் ஓட்டுசாவடி மையங்களாக உள்ள பள்ளி வளாகங்களில் மதம் தொடர்பான நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது சட்ட ரீதியாக தவறு.

கோவை - குனியமுத்துாரில் சட்டவிரோத கட்டடம் என, கோர்ட்டால், 'சீல்' வைக்கப்பட்ட இடத்தை திறந்து தொழுகை நடத்த அனுமதித்துள்ளனர். இந்த சட்டவிரோத செயலுக்கு போலீசார் பாதுகாப்பு இருந்துள்ளனர்.

திருப்பூரில், தேர்தல் மையமாக உள்ள பள்ளியில் தொழுகை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில், 40 சவுண்ட் பாக்ஸ் வைத்து மைதானத்தில் தொழுகை நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதை மக்கள் தட்டி கேட்ட பின், அதிகாரிகள் அதை ரத்து செய்துள்ளனர்.

அதே கன்னியாகுமரியில், ராமநவமி ஊர்வலத்துக்கு தேர்தலை காரணம் காட்டி தடை விதித்திருந்தது மாவட்ட நிர்வாகம். சென்னை ஐகோர்ட் மதுரை கிளை ஏற்கனவே நடந்த இடத்தில் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது பல ஆண்டுகளாக, ரம்ஜான் தொழுகை பல இடங்களில் எந்த தடையும் இல்லாமல் நடந்து வருவதை தேர்தல் ஆணையம் கண்ணை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிக்க கூடாது என சட்டம் இருந்தும், தி.மு.க., வினர் பொள்ளாச்சியில் கடவுள் படங்களை எடுத்து சென்று வீடு, வீடாக ஓட்டு கேட்டுள்ளனர்.

கிறிஸ்துவ பேராயர்கள், ஆயர்கள் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக கூட்டம் நடத்துவது தொடர்பாக எஸ்தர்மேரி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இவ்வாறாக பல சம்பவங்களை பார்க்கையில், தேர்தலை வேறு மாநில அரசு அதிகாரிகளை கொண்டு நடத்தினால் தான், நேர்மையாக நடக்கும் என்ற நிலை உள்ளது.

தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில், தேர்தல் முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகம், தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இதற்கு, தேர்தல் ஆணையம் முறையான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us