ADDED : ஏப் 30, 2024 10:28 PM
சென்னை:சென்னை எழும்பூரில் மாநில காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அந்த மையத்தை, தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும், அவசர போலீஸ் உதவி எண்களான 100, 101, 112ல் தொடர்பு கொள்ளலாம்.
அதிநவீன தொழில் நுட்ப கட்டமைப்புகள் இருப்பதால், ஆபத்தில் சிக்கி இருப்போரை அடையாளம் கண்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவர். ஆனால், அதிமுக்கியத்துவம் வாய்ந்த அவசர போலீஸ் உதவி எண்களை தொடர்பு கொண்டால், இணைப்பு கிடைக்கவில்லை.
நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, தொடர்பு தானாகவே துண்டித்து விடுவதாக புகார் எழுந்தது. இதனால், அவசர போலீஸ் உதவி எண்கள் முடங்கியதாக தகவல் பரவியது.
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ''ஒரே நேரத்தில் பலரும் அழைக்கும் போது, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. தொழில்நுட்ப கேளாறு ஏதும் ஏற்படவில்லை. மக்கள் வழக்கம் போல, அவசர போலீஸ் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.