என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
UPDATED : மே 31, 2024 08:53 PM
ADDED : மே 31, 2024 10:29 AM

சென்னை: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .இந்நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும்,அயோத்தி குப்பம் வீரமணியை சுட்டு கொன்றதிலும் பேர் வாங்கியவர் வெள்ளத்துரை. இவர் செய்த என்கவுன்டரால் வேகமாக பதவி உயர்வு பெற்று தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார்.
2013 ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லாக்கப் மரண புகாரில் வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளராக உள்ள அமுதா அறிவித்த சஸ்பெண்ட் உத்தரவு தன்னிச்சையாக எடுத்த முடிவு என புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு உள்துறை செயலாளர் அமுதாவை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்துரை சஸ்பெண்ட்டிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது கவனத்திற்கு உள்ளாகி உள்ளது.