புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு; அணிவகுத்த யானைகளால் உற்சாகம்
புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு; அணிவகுத்த யானைகளால் உற்சாகம்
UPDATED : மே 26, 2024 04:52 AM
ADDED : மே 26, 2024 04:50 AM

உடுமலை: தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மூன்று நாட்களாக நடந்தது. அதன் அடிப்படையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட, உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி நடந்தது.
![]() |
இப்பணி, 53 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, வனத்துறையினர், தன்னார்வலர்கள், என, 157 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த, 23ம் தேதி முதல் நாள், 15 கி.மீ., துாரம் வரை நடந்து, நேரடியாக யானைகளை கணக்கெடுத்தனர்.
இரண்டாவது நாள், 2 கி.மீ., துாரம் வரை நேர்கோட்டு பாதையில் நடந்து சென்று, யானை லத்தி உள்ளிட்ட எச்சங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. நேற்று, நீராதாரங்களில், கணக்கெடுப்பு என மூன்று நாட்கள் நடந்தது.
![]() |
இதில், ஆண், பெண், குட்டி, மக்னா என பாலினம் மற்றும் வயது வாரியாக கணக்கெடுக்கப்பட்டது. வழக்கத்தை விட, கூடுதல் யானை கூட்டங்களும், யானை குட்டிகளும் தென்பட்டன. அதிலும், அமராவதி அணைக்கு நீர் தேடி, உடுமலை - மூணாறு சாலையை யானைக்கூட்டங்கள் அதிகளவு கடக்கின்றன.
கணக்கெடுப்பு குறித்த ஆவணங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, ஒருங்கிணைக்கப்பட்டு எண்ணிக்கை வெளியிடப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.