வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோ ஷூட்! தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்.,
வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோ ஷூட்! தி.மு.க., அரசை விளாசிய இ.பி.எஸ்.,
ADDED : நவ 30, 2024 11:53 AM

சென்னை; மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன என்று அ.தி-மு.க, பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை;
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் பணிகள் என்று தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோ ஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!
எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க., சார்பில் உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.