ADDED : ஆக 06, 2024 02:59 AM

'இப்பவே கண்ணைக் கட்டுதே' என நினைப்பவர்களுக்கு காஞ்சிபுரம் 'கருக்கினில் அமர்ந்த' அம்மனிடம் முறையிடுங்கள்.
அசுரனான மகிஷாசுரன் ஆணவத்தால் பலரை துன்புறுத்தினான். அவனை அழித்த பார்வதியே, இங்கு இருக்கிறாள்.
கருக்கு என்றால் பனைமரம். பனை மரத்தடியில் அசுரனை கொன்றதால் அம்மனுக்கு இப்பெயர் வந்தது.
திரிசூலம், கத்தி, நாகம், வேல், அக்னி குண்டம், உடுக்கை நாகம், கேடயம், கங்கையைத் தன் எட்டு கைகளில் தாங்கியபடி இருக்கிறாள்.
அசுரனின் தலை மீது வலது பாதமும், திரிசூலம் அவனைக் குத்தியபடியும் உள்ளது. ஜேஷ்டா தேவி, நவகன்னியர் சன்னதிகள் உள்ளன. ஆடி வெள்ளி தோறும் பூப்பந்தலிலும், ஆடி ஞாயிறு தோறும்
பம்பை, உடுக்கை முழங்க அம்மன் வர்ணிப்பும் நடக்கும்.
எப்படி செல்வது
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
நேரம் :காலை 7:30 - 11:00 மணி மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு
92454 56412