ADDED : ஆக 08, 2024 01:10 AM

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை அடுத்து கிளாம்பாக்கம் லலிதா மகாதிரிபுரசுந்தரியை தரிசித்தால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
முன்பு இங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பாம்பு புற்றை கண்டனர். அவர்களில் ஒருவனது கனவில் அம்மன் கரும்பு வில்லும், பாசாங்குசமும் கொண்டு காட்சி தந்தாள். இதை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காஞ்சி ஸ்ரீமடம் சென்று உத்தரவு பெற்று லலிதா மகாதிரிபுரசுந்தரி அம்மனுக்கு கோயில் கட்டினர்.
கரும்பு, பஞ்ச புஷ்பத்தை ஏந்தியபடி இருக்கும் அம்மனுக்கு வளையல் மாலை சாத்தினால்
குழந்தை வரமும், சேலை சாத்தினால் திருமண வரமும் கிடைக்கும். பூர நட்சத்திரத்தன்று
நடக்கும் சண்டி ஹோமம், சித்ரா பவுர்ணமி அன்று நடக்கும் நெய்க்குள தரிசனம் விசேஷமானவை.
எப்படி செல்வது
* திருவள்ளூரில் இருந்து 10 கி.மீ.,
* செவ்வாய்பேட்டையில் இருந்து 6 கி.மீ.,
நேரம் : காலை 7:30 - 11:30 மணி மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு
95512 07784