சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ADDED : செப் 18, 2024 06:29 AM

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவர் காக்கா தோப்பு பாலாஜி (39). 1990ம் ஆண்டுகளில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி, பின்னர் வியாசர்பாடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானார்.
இவர் மீது 50 மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரை போலீசார் வலை வீசி தேடி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று(செப்.,18) வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையில் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.,குடியிருப்பு பகுதியில் பாலாஜியை போலீசார் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவர் போலீசாரிடம் தப்பித்து செல்ல தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, தற்காப்புக்காக, போலீசார் நடத்திய என்கவுன்டரில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.