நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
UPDATED : செப் 01, 2024 09:20 AM
ADDED : செப் 01, 2024 07:40 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (செப்.,01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வழக்கமாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். லோக்சபா தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் மாற்றப்பட வேண்டிய கட்டணம் ஜூனில் உயர்த்தப்பட்டது. 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று(செப்.,01) மேலும் 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (செப்.,01) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 முதல் 7 சதவீதம் சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ரூபாய் 5 முதல் 150 வரை கூடுதல் கட்டணத்தை செலுத்தி பயணிக்க வேண்டியுள்ளது.