கிணறு, பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம்
கிணறு, பண்ணை குட்டை அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம்
ADDED : ஆக 04, 2024 01:50 AM

சென்னை: நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில், திறந்தவெளி கிணறு, பண்ணைக்குட்டை உள்ளிட்ட பல்வேறு பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன. இதற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.
சிறு, குறு விவசாயி களின் நிலங்களில், மண்வரப்பு, கல்வரப்பு அமைத்தல், திறந்தவெளி கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பழமரக்கன்று நடுதல்.
மீன் உலர்கலம் அமைத்தல், மண்புழு உர குழி அமைத்தல், அசோலா உர தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இலவசமாக செய்து தரப்படவுள்ளன.
இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பயன்பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையங்களை அணுக வேண்டும். அங்கு தங்கள் பெயர், மொபைல் போன், விவசாய நிலத்தின் சர்வே எண், முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, வேளாண்துறை கூறியுள்ளது.