ராமநாதபுரத்தில் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம்
ராமநாதபுரத்தில் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை தப்பி ஓட்டம்
ADDED : மே 28, 2024 12:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
ராமநாதபும் அருகே நொச்சிவயல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 55. வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுந்தரவல்லி 50. கருத்து வேறுபாட்டால் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் இளைய மகன் அருண்சிங் 28, சென்னை மெட்ரோவில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார்.
நேற்று முன் தினம் ராமநாதபுரம் வந்திருந்தார். அப்போது ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ராமச்சந்திரன் அருண்சிங்கை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்சிங் அங்கு இறந்தார். ராமச்சந்திரனை பிடிக்க போலீசார் சென்னை சென்றுள்ளனர்.