பிரதமர் பதவியேற்பில் பெண் பைலட்டுக்கு பங்கேற்க அழைப்பு
பிரதமர் பதவியேற்பில் பெண் பைலட்டுக்கு பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 07, 2024 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:லோக்சபா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்திய பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா, டில்லியில் நாளை ஜூன் 9ல் நடக்க உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா எஸ்.மேனன், இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள், வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற அதிவிரைவு ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சிக்னல்களை உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை, ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது.
சென்னை -- விஜயவாடா, சென்னை -- கோயம்புத்துார் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில், இவர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.