UPDATED : ஆக 14, 2024 11:31 AM
ADDED : ஆக 14, 2024 11:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (ஆகஸ்ட் 14) காலை 9:45 மணிக்கு லாரியில் இருந்து ரசாயனப் பொருட்களை இறக்கி வைத்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் நாக பாளையத்தைச் சேர்ந்த புலிக் குட்டி, 45, குன்னூரை சேர்ந்த கார்த்திக் ,35, ஆகிய இருவர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.