ADDED : மே 05, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லுாரிகளிலும், சீர்மீகு சட்டப் பள்ளியிலும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள், பல்கலை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.