ஜி.டி.நாயுடு மேம்பாலம் தி.மு.க.,- அ.தி.மு.க., மோதல்
ஜி.டி.நாயுடு மேம்பாலம் தி.மு.க.,- அ.தி.மு.க., மோதல்
ADDED : ஆக 25, 2026 07:11 AM

சென்னை: கோவை - அவிநாசி சாலையில் உள்ள, ஜி.டி. நாயுடு மேம்பாலம் தொடர் பாக, தி.மு.க.,- அ.தி.மு.க., இடையே, நேற்று சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
அதன் விபரம்:
அ.தி.மு.க., -வேலுமணி: கோவை - அவிநாசிசாலையில் உள்ள, உயர்மட்ட மேம்பாலத்திற்குஅ.தி.மு.க., ஆட்சியில், 'டெண்டர்' விடப்பட்டது. தி.மு.க.,ஆட்சியில், அந்த பாலத்தின் திட்டம் நீட்டிக்கப்பட்டது. பாலத்திற்கு, ஜி.டி.நாயுடு என, பெயர் வைத்தனர்.
தி.மு.க.,- எ.வ.வேலு: கோவை - அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 'டெண்டர்' விடப்பட்டு,10 சதவீதப் பணிகள் நடந்திருந்தன. ஆட்சிமாற்றம்ஏற்பட்டதும், தி.மு.க., ஆட்சியில், 90 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தென்னகத்தின் விஞ்ஞானி என அழைக்கப்படும், 'ஜி.டி.நாயுடு' பெயர் மேம்பாலத்திற்கு சூட்டப்பட்டது.
அ.தி.மு.க.,-பழனிசாமி:கோவை மாநகரம் வளர்ந்து வருகிறது. அங்கு, போக்குவரத்து நெரிசல் இருக்கக் கூடாது என்பதற்காக, அவிநாசிசாலையில், 10 கி.மீ., நீளம் கொண்ட மேம்பாலப் பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் 45 சதவீதம் நிறைவு பெற்றது.
அ.தி.மு.க., எஸ்.பி.வேலுமணி: முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு, முழு பூசணியை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இதை, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
