ADDED : ஜூலை 15, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்த நிலையில் லேசான சாரலுடன் பனிமூட்டம் நிலவியது.
இத்தகைய காலநிலையை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் நகரில் ஆங்காங்கே தரையிறங்கிய மேக கூட்டம் ரம்யமாக காட்சியளித்தது.
வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

