ADDED : ஏப் 11, 2024 12:06 AM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில், தென் மாவட்டங்களில் சில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலையானது, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, திருப்பத்துாரில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி, வேலுார், 38; நாமக்கல், தர்மபுரி, 39; ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம், 40 டிகிரி செல்ஷியஸ் என, மொத்தம், 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், 36; பாம்பன், 35; நாகை, புதுச்சேரி, 34; வால்பாறை, 31; கொடைக்கானல், 21; ஊட்டி, 27 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.

