தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ராகுல், பிரியங்கா கைதுக்கு த.மா.கா., வாசன் கண்டனம்

ராகுல், பிரியங்கா கைதுக்கு த.மா.கா., வாசன் கண்டனம்

ராகுல், பிரியங்கா கைதுக்கு த.மா.கா., வாசன் கண்டனம்

1


UPDATED : அக் 08, 2026 06:34 PM

ADDED : அக் 08, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:34 PM ADDED : அக் 08, 2026 05:46 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., -எம்.பி., பிரியங்கா மற்றும் எதிர்கட்சி எம்.பி.,க்களை, போலீசார் கைது செய்த நடைமுறை கண்டனத்துக்குரியது' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான நடவடிக்கையில், மக்களுக்கு நம்பிக்கை குறைந்து, சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகளை மாற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி, தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக, டில்லியில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும், எம்.பி.,க்களும் ஜனநாயக முறைப்படி போராடினர். அவர்களை போலீசார் கைது செய்த நடைமுறை ஏற்புடையதல்ல; கண்டனத்துக்குரியது.

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எம்.பி.,க்கள் மீது, டில்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும் முறையற்றது. இது போன்ற அணுகுமுறையை, போலீசாரும், டில்லி அரசும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us