ADDED : ஆக 25, 2024 06:06 AM

கம்பம் : தேனி மாவட்டம், கம்பம், நகர் கோம்பை ரோடு வீதி, தீயணைப்பு துறை அலுவலகம் எதிரில் உள்ள வீதியில், நேற்று முன்தினம் மாலை சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது.
வனத்துறையினர், நேற்று காலை சிறுத்தை நடமாட்டத்தை அறிய அங்கு சென்றனர்.
அப்போது, கம்பம் மேற்கு வனச்சரகத்தை சேர்த்த வனக்காவலர் ரகு, 30, மீது சிறுத்தை பாய்ந்து, நகங்களால் தாக்கி காயப்படுத்தியது.
மற்ற வனக்காவலர்கள் சத்தம் போட்டதால், சிறுத்தை ரகுவை விட்டு புதருக்குள் சென்று மறைந்தது. காயமடைந்தவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாவட்ட வன அலுவலர் சமர்த்தா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டவும், ஊருக்குள் திரும்பினால், வலையை பயன்படுத்தி பிடிக்கவும் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வாய்ப்பு உள்ளதா என அறிய, மதுரை சரக வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு உள்ளனர்.