UPDATED : ஆக 31, 2024 07:50 PM
ADDED : ஆக 31, 2024 07:25 PM

சென்னை: சென்னையின் மையப்பகுதியில், முதல்முறையாக நடக்க இருக்கும் பார்முலா -4 ரேஸ் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
சென்னையில், பார்முலா 4 கார் ரேஸ் இன்று துவங்கி, நாளை நிறைவுறுகிறது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ., துார சாலையில், இரவு நேர போட்டியாக நடக்கிறது. இரவு 10.45 மணி வரையில் இப்போட்டிநடைபெறுகிறது. FIA முதற்கட்ட அனுமதி கிடைத்ததன் காரணமாக கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் துவங்கியது.
ஓட்டுநர்கள் ஒடுதளம் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் F4 இரவு நேர சாலை கார் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னையில் மழை காரணமாக போட்டியை நடத்துவதற்கான எப்.ஐ.ஏ., சான்றிதழை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. தொடர்ந்து எப்.ஐ.ஏ., சான்றிதழ் பெறப்பட்டதை தொடர்ந்து பந்தயம் துவங்கி உள்ளது.
கார் பந்தயம் இரண்டு பிரிவுகளாக, இந்தியன் சாம்பியன் ஷிப், இந்தியன் ரேசிங்லீக் என இருபிரிவுகளாக நடைபெறுகிறது. தகுதி சுற்றின் அடிப்படையிலேயே நாளை நடைபெறும் பிரதான போட்டியில் வீரர்கள் பங்கேற்கின்றனர்.