sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

/

ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

3


ADDED : ஏப் 06, 2024 01:25 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 01:25 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தேர்தல் நாளன்று வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் அரசோடு இணைந்து, நகர்ப்புறங்களில் பஸ்களை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும், சராசரியாக, 70 முதல் 74 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகின்றன. தேர்தல் கமிஷன், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஊரகப் பகுதிகளை விட, நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், வாக்காளர்கள் தங்கள் பணி, குழந்தைகள் கல்வி உட்பட பல்வேறு காரணங்களுக்காக, ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறுகின்றனர். அப்படி மாறுவோர், ஓட்டுரிமையை அந்த பகுதிக்கு மாற்றாமல் விட்டு விடுகின்றனர்.

அவர்கள் ஓட்டுப்பதிவு அன்று, ஏற்கனவே ஓட்டு உள்ள பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவதில்லை. இது, ஓட்டுப்பதிவு குறைய முக்கிய காரணம். எனவே, ஓட்டுப்பதிவு அன்று மட்டும், பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, நகரப் பேருந்துகளில் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், மக்கள் தாங்கள் வசித்த பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவர் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஓட்டுப்பதிவு அன்று முன்னர் அரசியல் கட்சியினர், பொதுமக்களை வாகனங்களில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இது, மறைமுகமாக வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதாக உள்ளது எனக்கூறி, வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாததால், ஓட்டளிப்பது குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் ஓட்டுப்போட, ஓட்டுச் சாவடிக்கு செல்வதற்கு வசதியாக, அரசு அன்று ஒரு நாள் மட்டும், டவுன் பஸ்களில் மக்கள் இலவசமாக சென்று வர அனுமதிக்கலாம். இதுகுறித்து, தேர்தல் கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இது, ஓட்டுப்போட செல்லும் மக்களுக்கு உதவியாக இருக்கும். இதற்காகும் செலவை, தேர்தல் கமிஷனும், மாநில அரசும் பகிர்ந்து கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து, 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us