UPDATED : ஜூன் 08, 2024 11:28 AM
ADDED : ஜூன் 08, 2024 10:11 AM

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ரூ.53,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 8) 22 காரட் ஆபரணத் தங்கம், விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை எவ்வளவு?
வெள்ளி விலை கிராமுக்கு இன்று(ஜூன் 08) ரூ.4.50 குறைந்து ரூ.96.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.