சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது
ADDED : ஜூன் 25, 2024 02:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பெண்கள் உட்பட 10 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்துவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று (ஜூன் 25) துபாயில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண் உட்பட 10 பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.