ADDED : ஜூலை 25, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநியில் வீசிய காற்றில் அரசு பஸ் கூரை பறந்தது. பயணிகள் அலறினர்.
பழநியில் இருந்து கீரனுாருக்கு சென்ற அரசு பஸ் நரிக்கல்பட்டி அருகே சென்றபோது காற்றின் வேகத்தில் பஸ் கூரை பறந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற பஸ்களை ஓடச்செய்து பயணிகளின் உயிருடன் விளையாடும் போக்கை அரசு போக்குவரத்துக்கழகம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக பழநி கிளை மேலாளர் ஜெயக்குமார் கூறியது: காற்று அதிகமாக இருந்ததால் இது நிகழ்ந்துள்ளது என்றார்.

